உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட கனிமவள துறையினர் நேற்று முன்தினம் திருத்தணி-திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் பாண்டூர் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட அசோக் லைலண்ட் லாரியை நிறுத்திய போது, அதன் ஓட்டுனர் லாரியை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார்.லாரியில் சோதனை செய்த போது, 8 யூனிட் ஆற்று மணல் இருந்தது. இதையடுத்து கனிமள துறை உதவி புவியிலாளர் பாலாஜி லாரியை பறிமுதல் செய்து, திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் வழக்கு பதிந்து, லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.* இதே போல் கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தனர். அப்போது, உரிய அனுமதியின்றி மணல் கடத்தி வந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர்.ஓட்டுனரான கும்மிடிப்பூண்டி அடுத்த ராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்த சபாபதி, 34, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி