கழிவுகளை குவித்த டிராக்டர் பறிமுதல்
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை --- சத்தியவேடு நெடுஞ்சாலையில், மேல்முதலம்பேடு ஏரிக்கரையை ஒட்டி நேற்று முன்தினம் இரவு, டிராக்டர் கழிவுகளை கொட்டியது.அதனை கண்ட பகுதிவாசிகள் டிராக்டரை சிறைப்பிடித்து கவரைப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார் டிராக்டர் ஓட்டுனரான, பன்பாக்கம் முனிசுந்தரம், 36, என்பவர் மீது வழக்கு பதிந்தனர். திருமண மண்டபம் ஒன்றின் கழிவுகளை டிராக்டரில் ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது.