உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடியிருப்புகளில் கழிவுநீர் திருமழிசையில் சீர்கேடு

குடியிருப்புகளில் கழிவுநீர் திருமழிசையில் சீர்கேடு

திருமழிசை:திருமழிசை பேரூராட்சியில், 15 வார்டுகளில் 130க்கும் மேற்பட்ட தெருக்களில், 6,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடையின் பல பகுதிகளில், அவ்வப்போது அடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் கழிவுநீர் குளம் போல் தேங்குகிறது.இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால், குடியிருப்பு வாசிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் திருமழிசை பேரூராட்சியில், பாதாள சாக்கடை பணிகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை