உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கழிவுநீர் தேக்கம், கொசுக்கடி, காய்ச்சல் சின்னம்மாபேட்டையில் தொடருது அவதி

கழிவுநீர் தேக்கம், கொசுக்கடி, காய்ச்சல் சின்னம்மாபேட்டையில் தொடருது அவதி

திருவாலங்காடு சின்னம்மாபேட்டையில் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால், கழிவுநீர் தேங்கி, கொசுக்கடி மற்றும் காய்ச்சலால், அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மேலும், 150க்கும் மேற்பட்ட கடைகள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் உள்ளன. திருவாலங்காடு மாநில நெடுஞ்சாலையை ஒட்டி கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கால்வாய் துார்வாரப்பட்டது. பின், பராமரிப்பு இல்லாததால், கால்வாய் மீது தனிநபர்கள் சிலர் கடைகளை அமைத்துள்ளனர். கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படாமல் உள்ளதாலும், ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டுள்ளதாலும், பல ஆண்டுகளாக கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், கழிவுநீரில் இருந்து உருவாகும் கொசு, பூச்சிகள், அங்குள்ள குடியிருப்பு மக்களை கடிப்பதால், வைரஸ் காய்ச்சலுக்கு உள்ளாகின்றனர். இப்பகுதியில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை அமைக்கப்படுகிறது. அப்போது, வெளியூர்களில் இருந்து வியாபாரிகள், அப்பகுதி மக்கள் என, ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவர்களும் நோய் பாதிப்பில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி கால்வாயை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை