உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரயில்வே மேம்பாலத்தில் வண்டல் மண் படலம் கிராம மக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமம்

ரயில்வே மேம்பாலத்தில் வண்டல் மண் படலம் கிராம மக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமம்

கடம்பத்துார்,:கடம்பத்துார் பகுதியில் ரயில்வே மேம்பாலத்தில் வண்டல் மண் படலத்தால் வாகன ஒட்டிகள் மற்றும் பகுதி மக்கள் அச்சத்தில் சென்று வருகின்றனர். கடம்பத்துார் பகுதியில் உள்ள திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலை வழியே தினமும் 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நெடுஞ்சாலையில் கடம்பத்துாரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் இருபுறமும் வண்டல் மண் படலம் அதிகாமாக உளளது. மணல் திட்டு போல் காட்சியளிக்கும் இந்த படலம் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் இந்த வண்டல் மண் படலத்தால் விபத்தில் சிக்கி வருவதால் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடம்பத்துார் ரயில்வே மேம்பாலத்தில் ஆய்வு செய்து, வண்டல் மண் படலத்தை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை