சிங்கிள் காலம் வணிகர் தினம் கடைகள் அடைப்பு
ஊத்துக்கோட்டை, வணிகர் தினத்தை ஒட்டி, நேற்று ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், வெங்கல், தாமரைப்பாக்கம், ஆரணி, பென்னலுார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மளிகை, ஹோட்டல்கள், குளிர்பான கடைகள், டீக்கடைகள் மூடப்பட்டன.பால் கடைகள், காலை 9:00 மணி வரை திறக்கப்பட்டு பின் மூடப்பட்டன. பூ, பழம் உள்ளிட்ட சாலையோர கடைகள் திறந்திருந்தன. மதியம் 4:00 மணிக்கு மேல் மளிகை, ஹோட்டல், டீக்கடை உள்ளிட்ட சில கடைகள் திறக்கப்பட்டன.