உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்சாரம் பாய்ந்து ஆறு எருமைகள் பலி

மின்சாரம் பாய்ந்து ஆறு எருமைகள் பலி

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் அருகே குமாரநாயக்கன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஹரி, 40. இவருக்கு சொந்தமான எருமை மாடுகள், அங்குள்ள திறந்தவெளியில் நேற்று மேய்ந்துக்கொண்டிருந்தன.அப்பகுதியில் உள்ள மின் பாதையில், மின் கம்பி ஒன்று அறுந்து கிடந்தது. அதை மிதித்த ஐந்து எருமைமாடுகள் மற்றும் ஒரு எருமை கன்று மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன. பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ