உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஜோதிடர் வீட்டில் கைவரிசை 6 சவரன் நகை, பணம் திருட்டு

ஜோதிடர் வீட்டில் கைவரிசை 6 சவரன் நகை, பணம் திருட்டு

ஆர்.கே.பேட்டை, திருப்பதி கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்ற ஜோதிடரின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, 6 சவரன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பத்தில் வசிப்பவர் ஏகாம்பரம், 41. இவர், நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். நேற்று காலை, அக்கம்பக்கத்தில் வசிப்போர், ஏகாம்பரம் வீட்டின் பின்புறம் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, மொபைல்போன் மூலம் ஏகாம்பரத்திற்கு தகவல் தெரிவித்தனர். திருப்பதியில் இருந்து வீட்டிற்கு வந்த ஏகாம்பரம், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 6 சவரன் நகை, பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து ஏகாம்பரம் அளித்த புகாரின்படி, ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி