ரூ.20 லட்சம் மதிப்பு திட நிலக்கரி மாயம்
கும்மிடிப்பூண்டி:சென்னை, கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ், 32; டிரான்ஸ்போர்ட் ஏஜென்சி நடத்தி வருகிறார். கடந்த மாதம் 11ம் தேதி தனியார் செயலி வாயிலாக, சத்தீஸ்கர் மாநில பதிவு எண் கொண்ட இரு லாரிகளை முன்பதிவு செய்தார்.அந்த லாரிகளில், கவரைப்பேட்டை அடுத்த கெட்ணமல்லி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் இருந்து, கர்நாடகா மாநிலத்திற்கு திட நிலக்கரி ஏற்றிச் செல்லப்பட்டது.பல நாட்கள் கடந்தும், திட நிலக்கரி லோடு சென்று சேராததால், குழப்பமடைந்த யுவராஜ், லாரி டிரைவர்களின் மொபைல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால், மொபைல்போன்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.இதையடுத்து, மாயமான திட நிலக்கரி லோடுகளை மீட்டுத்தர கோரி, கவரைப்பேட்டை காவல் நிலைத்தில் யுவராஜ் புகார் அளித்தார். இதன் மதிப்பு, 20 லட்சம் ரூபாய். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.