தாலுகா அலுவலகங்களில் சிறப்பு கடன் முகாம்
திருவள்ளூர்:'டாம்கோ' நிறுவனம் சார்பில் பொருளாதார மேம்பாட்டுக்கு கடன் வழங்க, சிறப்பு முகாம் நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:'டாம்கோ' நிறுவனத்தின் வாயிலாக, சிறுபான்மையினர்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் வாயிலாக, தனி நபர், சுய உதவிகுழுவினருக்கு சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்கள் மற்றும் கடன் திட்டம் ஆகியவை வழங்கப்படுகிறது.இதற்காக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் சிறப்பு கடன் முகாம் நடக்கிறது. அதன்படி, திருவள்ளூர்- டிச.6, ஆவடி- 9, பூந்தமல்லி-11, ஊத்துக்கோட்டை- 13, பொன்னேரி- 16; கும்மிடிப்பூண்டி-18, திருத்தணி- 20, ஆர்.கே.பேட்டை-23, பள்ளிப்பட்டு-26 ஆகிய தேதிகளில் நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.