ஸ்ரீநிகேதன் மாணவ -- மாணவியர் நுாறு சதவீதம் தேர்ச்சி
திருவள்ளூர்:பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில், திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழகம் முழுதும் பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று வெளியானது. அதில், திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 411 மாணவ - மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு எழுதிய மாணவ - மாணவியரில், வைத்தீஸ்வரி -596 மதிப்பெண் பெற்றுள்ளார். அவர், கணக்குப் பதிவியல், வணிக கணிதம், பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய நான்கு பாடங்களில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுத்து பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.மாணவர் அஸ்வின் -593 மதிப்பெண் பெற்று, வேதியியல், கணினி அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுத்துள்ளார். மாணவி தியானா- 593 மதிப்பெண் பெற்று, கணிதம், வேதியியல் ஆகிய பாடங்களில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுத்துள்ளார்.மகஸ்ரீ -590 மதிப்பெண் பெற்று, வேதியியல், கணினி அறிவியல் ஆகிய இரண்டு பாடங்களில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளார்.மாணவர் ரோகித் -590 மதிப்பெண் பெற்று கணினி அறிவியல் பாடத்தில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை பகிர்ந்துள்ளனர். சாதனை மாணவியர் மற்றும் ஆசிரியர்களை பள்ளி தாளாளர் விஷ்ணு சரண், பள்ளி இயக்குநர் பரணிதரன், பள்ளி முதல்வர் ஸ்டெல்லா ஜோசப், துணை முதல்வர் கவிதா ஆகியோர் பாராட்டி, இனிப்பு வழங்கினர்.