உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கோவில் காசோலை திரும்பியதால் சம்பளமின்றி தவிக்கும் ஊழியர்கள்

கோவில் காசோலை திரும்பியதால் சம்பளமின்றி தவிக்கும் ஊழியர்கள்

நரசிங்கபுரம்,திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், நரசிங்கபுரத்தில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்மர் கோவில். 2,000ம் ஆண்டு பழமை வாய்ந்த இக்கோவிலில், 2 அர்ச்சகர், 1 காவலாளி, 1 கணக்கர், 1 எழுத்தர், 1 பராமரிப்பு பணியாளர் என, மொத்தம் ஆறு பேர் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர்.இக்கோவில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள கோவிலாகும். இவர்களுக்கு சம்பளமாக மொத்தம் 24,500 ரூபாய் வழங்கப்படுகிறது.புதிதாக அறங்காவலர் தேர்ந்தெடுக்கும் முன் வரை மாதம் மாதம் சம்பளம் சரியாக வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில், ஜனவரி மாதச் சம்பளம் மற்றும் அரசு அறிவித்த பொங்கல் போனஸ் இன்று வரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து கோவில் செயல் அலுவலரிடம் கேட்டால் நிதி இல்லை என்று கூறுவதாக கோவில் ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும், ஐந்து மாதங்களில் உண்டியல் காணிக்கை மட்டும், 3 லட்சத்து 45,031 ரூபாய் கிடைத்துள்ளது. ஒரு மாதம் சம்பளம் மற்றும் செலவுகள் என, 30 ஆயிரம் செலவு செய்தால் மீதம், 2 லட்சத்து, 23,031 ரூபாய் இருக்க வேண்டும்.குத்தகை நிலம் 9 ஏக்கர் உள்ளது. ஒரு ஏக்கருக்கு நான்கு மூட்டை நெல் கொடுக்கப்படுகிறது.ஒரு மூட்டை 1,000 ரூபாய் என்றால் ஒரு ஏக்கருக்கு 4,000 ரூபாய், என 36,000 ரூபாய் கிடைக்கிறது.இந்த பணம் எங்கே செல்கிறது தெரியவில்லை என, பக்தர்கள், கோவில் ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.கடந்த ஜனவரி மாதம் கோவில் உள்பகுதியில் அறநிலையத் துறை அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட அறங்காவலர் கட்டடம் அகற்றப்பட்டது,எனவே, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆய்வு செய்து, முறையாக சம்பளம் மற்றும் அரசு அறிவித்த பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என, கோவில் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து நரசிங்கபுரம் கோவில் செயல் அலுவலர் விக்னேஷ் கூறுகையில், ''ஜனவரி மாதம் சம்பளம் கொடுக்க வங்கியில் பணம் எடுக்க வழங்கப்பட்ட காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்தது. ''விரைவில் சம்பளம் மற்றும் பொங்கல் போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை