உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் கொட்டப்பட்ட ஜல்லிக்கற்கள் பெரியபாளையத்தில் பக்தர்கள் அவதி

சாலையில் கொட்டப்பட்ட ஜல்லிக்கற்கள் பெரியபாளையத்தில் பக்தர்கள் அவதி

ஊத்துக்கோட்டை:சாலையில் கொட்டப்பட்ட ஜல்லிக்கற்களால், பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.

பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் தற்போது ஆடி மாத விழா நடைபெற்று வருகிறது. ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் சிறப்பு பூஜை நடைபெறும். இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திராவில் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று அம்மனை தரிசனம் செய்வர். இங்கு வருபவர்கள் சனிக்கிழமை மாலை முதல் கோவிலுக்கு வரத்துவங்கி அங்கு தங்கி, மறுநாள் பொங்கல் வைத்தல், அலகு குத்துதல், வேப்ப இலை ஆடை அணிதல் உள்ளிட்ட வேண்டுதல்களை நிறைவேற்றி அம்மனை வழிபடுவர். Galleryஅதிகளவில் பக்தர்கள் வரும் நிலையில் இப்பகுதியில் சாலை வசதி கேள்விக்குறியாக உள்ளது. கோவில் அருகில் உள்ள எல்லாபுரம் ஒன்றிய அலுவலகத்தை ஒட்டி ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு உள்ளது. தார்சாலை அமைக்காததால், பக்தர்கள் இங்கு நடப்பதற்கு சிரமப்படுகின்றனர். எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பக்தர்கள் நலன் கருதி ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட இடத்தில் தார்சாலை அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை