சிறுமி திருமணம் நிறுத்தம்
பொன்னேரி:பொன்னேரி அருகே உள்ள கிராமம் ஒன்றில், 17 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பதாக, '1098 சைல்டு ஹெல்ப்லைன்' எண்ணிற்கு புகார் வந்தது.அதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள், காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், சம்மந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பிளஸ் 2 முடித்து ஓராண்டாக வீட்டில் இருந்த சிறுமிக்கு, அவரது உறவினர் ஒருவருடன் வரும் 30ம் தேதி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது உறுதியானது.அதிகாரிகள், சிறுமியின் பெற்றோரிடம், பேசி திருமணத்தை நிறுத்தினர்.