உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இணைப்பு சாலையில்லாததால் தண்டவாளத்தை கடக்கும் மாணவர்கள்

இணைப்பு சாலையில்லாததால் தண்டவாளத்தை கடக்கும் மாணவர்கள்

திருத்தணி,:திருத்தணி ஒன்றியம், அலுமேலுமங்காபுரம் ஊராட்சிக்குட்பட்டது வள்ளூவர்பேட்டை கிராமம். இங்கு, 75க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், இயங்கி வரும் தொடக்கப் பள்ளியில், தற்போது 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தொடக்கப் பள்ளியில் படித்த மாணவர்கள், எட்டாம் வகுப்பு வரை படிப்பதற்கு சென்னை- - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கொல்லகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டும்.இந்த மாணவர்கள், பள்ளிக்கு செல்வதற்கு ரயில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். ரயில்வே தண்டவாளத்தின் கீழ் உள்ள சுரங்கப்பாதைக்கு இணைப்பு சாலை இல்லாததால் மாணவர்கள் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.இணைப்பு சாலை கேட்டு, கலெக்டரிடம் வள்ளூவர்பேட்டை மக்கள் கோரிக்கை மனுக்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை இணைப்பு சாலை அமைக்கவில்லை.எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இணைப்பு சாலை ஏற்படுத்தி தர வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை