உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  அரசு பேருந்தில் மாணவர்கள் சேட்டை ஆபத்தை அறியாமல் சாகசம்

 அரசு பேருந்தில் மாணவர்கள் சேட்டை ஆபத்தை அறியாமல் சாகசம்

திருவள்ளூர்: பள்ளி மாணவர்கள் ஓடும் பேருந்தில் ஏறியும், படிக்கட்டில் தொங்கியபடியும் ஆபத்தான பயணம் மேற்கொண்டதால், பயணியர் அதிருப்தி அடைந்தனர். திருவள்ளூரில் இருந்து பென்னலுார்பேட்டைக்கு அரசு பேருந்து தடம் எண் டி 41 ஏ இயக்கப்படுகிறது. திருவள்ளூரில் இருந்து காலை 6:00 மணிக்கு புறப்பட்டு, பென்னலுார்பேட்டைக்கு 8:00 மணியளவில் செல்கிறது. அங்கிருந்து, காலை 8:30 மணிக்கு மேல், அந்த பேருந்து புறப்பட்டு, பூண்டி வழியாக திருவள்ளூர் வருகிறது. பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர், பணிக்குச் செல்வோர் என, அந்த பேருந்தில், தினமும் காலை நேரத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும். நேற்று காலை வழக்கம் போல், பென்னலுார்பேட்டையில் இருந்து திருவள்ளூருக்கு, அந்த பேருந்து புறப்பட்டது. அந்த பேருந்தில், மாணவ, மா ணவியர், பொதுமக்கள் என, கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால், மாணவர்கள் சிலர், படிக்கட்டில் நின்றபடி பயணித்தனர். பூண்டி புல்லரம்பாக்கம் உள்ளிட்ட வழியில் உள்ள நிறுத்தங்களில், பேருந்து நிற்கும் போது, மாணவர்கள், கீழே இறங்கினர். பேருந்து புறப்பட்டதும், சிறிது துாரம் அதனுடன் ஓடிச் சென்று பின், பேருந்தில் ஏறி, மீண்டும் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர். குறிப்பாக, புல்லரம்பாக்கத்தில் பேருந்தில் ஏறிய 10க்கும் மேற்பட்ட மாணவர்களின் சேட்டை, திருவள்ளூர் வரை தொடர்ந்தது. நடத்துநர், ஓட்டுநர் மற்றும் பயணியர் மாணவர்களை, பேருந்து உட்பகுதிக்குள் வருமாறு கண்டித்தும், அவர்கள் அலட்சியப்படுத்தினர். இதனால், வேறு வழியின்றி, மாணவர்களின் சேட்டையுடன், அந்த பேருந்து, திருவள்ளூர் வந்தது. எனவே, போலீசார் காலை நேரத்தில், பென்னலுார்பேட்டை-திருவள்ளூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்தில், படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை கண்டிக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ