உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடிநீர் தொட்டிக்கு குழாய் பொருத்தி பிளம்பர் வேலை பார்த்த மாணவர்கள்

குடிநீர் தொட்டிக்கு குழாய் பொருத்தி பிளம்பர் வேலை பார்த்த மாணவர்கள்

கே.ஜி.கண்டிகை:அரசு பள்ளியின் குடிநீர் தொட்டிக்கு குழாய் பொருத்தும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர். திருத்தணி ஒன்றியம் வி.சி.ஆர்.கண்டிகை கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் ஆண், பெண் கழிப்பறைகள் தனித்தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. கழிப்பறை கட்டடத்தின் மேல்தளத்தில் சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன் தண்ணீர் தொட்டிக்கு செல்லும் பைப் சேதம் அடைந்தது. இதையடுத்து புதிதாக பைப் பொருத்த வாங்கி வந்தனர். நேற்று முன்தினம், கழிப்பறை கட்டடத்தின் மேல்ப்பள்ளி மாணவர்கள் நான்கு பேர் ஏறி தண்ணீர் தொட்டிக்கு குழாய் இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அங்கு, ஆசிரியர்கள் இல்லாமல் இருந்ததால், அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Arul. K
செப் 26, 2025 12:15

ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் / முன்னிலையில் நடந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். படிப்பறிவைவிட பட்டறிவே மனதில் நிற்கும். ஆசிரியர் ஒருவரும் இல்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை