உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம் விமரிசை

சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம் விமரிசை

திருத்தணி:திருத்தணி பழைய தர்மராஜாகோவில் தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி விழா துவங்கியது. தினமும் காலை மூலவருக்கு சந்தனகாப்பு, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது.மேலும், மதியம் மகாபாரத சொற்பொழிவும், இரவு நாடகமும் நடந்து வருகிறது. நாளை மறுநாள் அர்ஜுனன் தபசு, 11ம் தேதி தீமிதி விழா நடைபெறும்.நேற்று பழைய தர்மராஜாகோவில் தெருவில் உள்ள சதாசிவ லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில், சுபத்திரை திருமணம் நிகழ்ச்சி நடந்தது. காலை 10:30 மணிக்கு யாகசாலை பூஜையுடன் துவங்கிய திருக்கல்யாண நிகழ்ச்சியில் உற்சவர் அர்ஜுனனுக்கும், சுபத்திரை அம்மனுக்கும் திருமணம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி