உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம்

சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம்

திருத்தணி:திருத்தணி அடுத்த தாழவேடு கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா, கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 2:00 முதல் மாலை 5:00 மணி வரை மகாபாரத சொற்பொழிவும், இரவு நாடகமும் நடந்து வருகிறது.நேற்று முன்தினம் அர்ஜுனன் தபசு நிகழ்ச்சியும், நேற்று காலை சுபத்திரை அம்மன் திருக்கல்யாணமும் நடந்தது. இதில், உற்சவர் அர்ஜுனனுக்கும், சுபத்திரை அம்மனுக்கும் திருமணம் நடந்தது. தொடர்ந்து, உற்சவர் அர்ஜுனன், சுபத்திரை அம்மன் கோவில் வளாகத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு திருமண விருந்து வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிப்பட்டனர்.வரும் 25ம் தேதி துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !