உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மானிய விலையில் வேப்ப எண்ணெய்

மானிய விலையில் வேப்ப எண்ணெய்

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் இயங்கி வருகிறது. அங்கு, தற்போது விவசாய பயன்பாட்டிற்கான வேப்ப எண்ணெய், மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இரண்டரை ஏக்கர் நிலத்திற்கு, ஒன்றரை லிட்டர் வேப்ப எண்ணெய் என்ற வகையில், ஒரு லிட்டர், 590 என்பதை மானிய விலையில் 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் மற்றும் 500 மி.லி., பாட்டில்கள் விற்பனைக்கு வைத்துள்ளனர்.குறைந்த அளவில் இருப்பு இருப்பதால் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வேப்ப எண்ணெய் வாங்க வரும் விவசாயிகள், விவசாய நிலத்தின் சர்வே எண் மற்றும் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை