உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி கோவிலில் தமிழக ஆளுநர் குடும்பத்துடன் தரிசனம்

திருத்தணி கோவிலில் தமிழக ஆளுநர் குடும்பத்துடன் தரிசனம்

திருத்தணி:தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவி லட்சுமியுடன் நேற்று முன்தினம் காளஹஸ்திரி மற்றும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இரவு திருப்பதியில் தங்கியிருந்த ஆளுநர் ரவி மற்றும் அவரது மனைவி நேற்று நண்பகல், 11:40 மணிக்கு திருத்தணி ஜி.ஆர்.டி., நட்சரத்திர ஓட்டலுக்கு வந்தார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்பு, மதியம், 12:45 மணிக்கு ஆளுநர் ரவி தனது மனைவியுடன் காரில் முருகன் மலைக்கோவிலுக்கு வந்தார்.அங்கு கோவில் இணை ஆணையர் ரமணி, தலைமை குருக்கள், பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்று மலர் மாலை அணிவித்து கோவிலுக்குள் மங்கள வாத்தியங்களுடன் அழைத்து சென்றனர்.முதலில், ஆளுநர் ரவி, அவரது மனைவி கொடிமரத்தை தொட்டு வணங்கிய பின், ஆபத்சகாய விநாயகர், உற்சவர் சண்முகர், மூலவர் முருகர், வள்ளி, தெய்வானை, துர்க்கையம்மன் மற்றும் உற்சவர் முருகப்பெருமான் ஆகிய சன்னதிகளில் ஆளுநர் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிப்பட்டார். தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில், ஆளுநருக்கு பிரசாதங்கள், முருகர் படம் வழங்கி கவுரவித்தனர்.தொடர்ந்து மதியம், 1:20 மணிக்கு மலைக்கோவிலில் இருந்து ஆளுநர் ரவி தனது மனைவியுடன் காரில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநிவாசா பெருமாள், திருத்தணி ஆர்.டி.ஓ., தீபா ஆகியோர் ஆளுநர், அவரது மனைவி ஆகியோரை வரவேற்று பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.ஆளுநர் வருகை ஒட்டி முருகன் மலைக்கோவில் மற்றும் திருத்தணி பகுதியில், 300க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆளுநர் வருகை ஒட்டி மலைக்கோவிலுக்கு மூன்று மணி நேரம் அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ