உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வடிகாலில் கழிவு நீர் விட்ட டேங்கர் லாரி பறிமுதல்

வடிகாலில் கழிவு நீர் விட்ட டேங்கர் லாரி பறிமுதல்

திருவேற்காடு:தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மழைநீர் வடிகாலில், கழிவு நீர் கொட்டிய டேங்கர் லாரி பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள மழைநீர் வடிகாலில், முறைகேடாக கழிவு நீர் கொட்டப்படுவதாக, மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார் வந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு திருவேற்காடு நகராட்சி கமிஷனர் ராமன் தலைமையிலான அதிகாரிகள், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வேலப்பன்சாவடி அடுத்த பள்ளிக்குப்பம், அணுகு சாலையில் உள்ள மழைநீர் வடிகாலில், லாரி ஒன்று கழிவுநீரை கொட்டுவது தெரிய வந்தது. அதிகாரிகள், அந்த லாரியை சுற்றிவளைத்து, திருவேற்காடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், கழிவுநீரை முறைகேடாக வடிகாலில் கொட்டியது, காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பூபதி, 31, என தெரிந்தது. கழிவுநீர் அகற்றும் லாரியின் உரிமையாளர் ரஞ்சித். இது தொடர்பாக, திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை