உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பிளாஸ்டிக் குப்பையால் பாழாகும் கோவில் குளம்

பிளாஸ்டிக் குப்பையால் பாழாகும் கோவில் குளம்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அஸ்வரேவந்தாபுரத்தில், 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் வடக்கில் உள்ள அஸ்வரேவந்தாபுரம் ஏரியும், தெற்கில் உள்ள சோளிங்கர் ஏரியும் பிரதான நீராதாரங்களாக அமைந்துள்ளன. அஸ்வரேவந்தாபுரத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில், கமல விநாயகர் கோவில் பின்புறம் ஒரு குளமம் உள்ளது. இந்த குளம் கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி துார்ந்து வருகிறது. சுற்றுப்பகுதியை சேர்ந்தவர்கள் இந்த குளத்தில் குப்பை கொட்டி வருகின்றனர். குளக்கரையில் இருந்த குப்பை தொட்டியும், குளத்தில் கவிழ்ந்து கிடக்கிறது. குப்பையால் துார்ந்துவரும் இந்த குளம், விரைவில் இருந்த தடமே தெரியாமல் முற்றிலுமாக அழியும் நிலை உள்ளது. கிராமத்தின் பழமையான இந்த நீராதாரம், குப்பை கொட்டி துார்க்கப்படுவதால் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். குப்பையை அகற்றி குளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை