உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தளபதி கே.விநாயகம் கல்லுாரி முதலாமாண்டு வரவேற்பு விழா

தளபதி கே.விநாயகம் கல்லுாரி முதலாமாண்டு வரவேற்பு விழா

திருத்தணி:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் திருத்தணி தளபதி கே.விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவியரின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி தாளாளர் எஸ்.பாலாஜி தலைமை வகித்தார். முதல்வர் வேதநாயகி வரவேற்றார். துணை முதல்வர் பொற்செல்வி முன்னிலை வகித்தார்.இதில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி பங்கேற்று பேசியதாவது: மாணவியர் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். குழந்தைகளின் கனவுகளை பெற்றோர் நிறைவேற்ற வேண்டும். அதே போல் பெற்றோர் கனவையும் மாணவியர் நிறைவேற்றுவதற்கு விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் படிக்க வேண்டும். நேரத்தை வீணாடிக்காமல் தங்களை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். சமூக வலைதள நண்பர்கள் வைத்துக் கொள்ளக் கூடாது. எண்ணங்கள் துாய்மையாக இருந்தால் உயர்ந்த பதவிகள் அடையலாம். கல்வி தான் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக முதலாமாண்டு மாணவியர்களை இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவியர் வரவேற்று, மகிழ்ச்சியை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி