உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / செடிகளில் மறைந்துள்ள அலுமேலுமங்காபுரம் சுடுகாடு

செடிகளில் மறைந்துள்ள அலுமேலுமங்காபுரம் சுடுகாடு

திருத்தணி : திருத்தணி ஒன்றியம், அலுமேலுமங்காபுரம் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் அலுமேலுமங்காபுரம் - பொன்பாடி ரயில் நிலையம் செல்லும் சாலையோரம் ஒன்றரை ஏக்கர் பரப்பில் நிலத்தில் சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர்.ஊராட்சி நிர்வாகம், 2009- - 10ம் ஆண்டு, உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், 3 லட்சம் ரூபாயில் சுற்றுச்சுவர் மற்றும் எரிமேடை போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.ஆனால், முறையாக பராமரிக்காததால், தற்போது முட்செடிகள் வளர்ந்து, எரிமேடை இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு வளர்ந்துள்ளன. மேலும், சுடுகாட்டிற்கு செல்வதற்கு சரியான பாதையும் இல்லாததால், இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு ஒவ்வொரு முறையும் சிரமப்பட வேண்டியுள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அலுமேலுமங்காபுரம் சுடுகாடு பகுதியை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ