உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் கண்டெடுத்த 4 சவரன் நகை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

சாலையில் கண்டெடுத்த 4 சவரன் நகை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

மீஞ்சூர்:மீஞ்சூர், அண்ணாமலை நகரை சேர்ந்தவர் முருகன், 42; ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் மீஞ்சூர் புதுப்பேடு அம்பேத்கர் சிலை அருகே செல்லும்போது, சாலையில், தங்க தாலிசரடு கிடந்ததை கண்டார்.அப்பகுதியில் யாரும் இல்லாத நிலையில், அதை எடுத்துக்கொண்டு சிறிது நேரம் காத்திருந்தார். உரிமைகோரி யாரும் வராத நிலையில் வீட்டிற்கு சென்று மனைவியிடம் கூறி உள்ளார்.பின், மனைவியுடன் மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு சென்று, சாலையில் கண்டெடுத்த தாலிசரடை இன்ஸ்பெக்டர் காளிராஜிடம் ஒப்படைத்தார்.அதே சமயம், மீஞ்சூர் அண்ணா தெருவை சேர்ந்த கமலநாதன், 35, என்பவரின் மனைவி, பள்ளிக்கு சென்றுவரும்போது, தன் 4 சவரன் தாலிசரடு தொலைந்துவிட்டதாக புகார் அளிக்க காவல் நிலையம் வந்தார்.தொலைந்த தாலி சரடின் அடையாளங்களை இன்ஸ்பெக்டர் காளிராஜ் கேட்டறிந்தார். விசாரணையை தொடர்ந்து, ஆட்டோ டிரவைர் கொண்டு வந்து ஒப்படைத்த தாலிசரடு, கமலநாதனின் மனைவியுடையது என்பது உறுதியானது.அதையடுத்து தாலிசரடு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. சாலையில் கண்டெடுத்த, தாலிசரடை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த முருகன் மற்றும் அவரது மனைவியை இன்ஸ்பெக்டர் காளிராஜ், பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி