உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குண்டும் குழியுமான பைவலசா பள்ளி வளாகம்

குண்டும் குழியுமான பைவலசா பள்ளி வளாகம்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பைவலசா கிராமத்தில், அரசு தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. மலைச்சரிவில் அமைந்துள்ளதால், மழைக்காலத்தில் ஊருக்குள் வெள்ளநீர் பெருக்கெடுத்து பாய்வது உண்டு.இந்நிலையில், பிரதான சாலையில், மலையடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள தொடக்க பள்ளி வழியாகவும் மழைநீர் பாய்வது உண்டு.இந்நிலையில், பள்ளி வளாகத்தில் பழுதடைந்து இருந்த வகுப்பறை கட்டடம் ஒன்று, சில ஆண்டுகளுக்கு முன் இடித்து அகற்றப்பட்டது. அந்த வகுப்பறை இருந்த இடத்தில் தரைப்பகுதி கரடு முரடாக காணப்படுகிறது.மழைநீரில் மண்ணரிப்பு ஏற்பட்டு, குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.பள்ளி வளாகத்தில் விளையாட முடியாமல் தவிக்கின்றனர். மாணவர்களின் வசதியை கருத்தில் கொண்டு, பள்ளி வளாகத்தை சீரமைக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !