உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  தொழிலாளர் பிரச்னைக்கு அரசு தீர்வு காண வேண்டும்

 தொழிலாளர் பிரச்னைக்கு அரசு தீர்வு காண வேண்டும்

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகரில், இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், மருத்துவக் காப்பீடு, கருணைத்தொகை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்க வலியுறுத்தி, ஐந்து நாட்களுக்கும் மேலாக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை, இந்தியன் ஆயில் நிறுவனம் ஏற்க மறுத்து வருவது கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில், தமிழக தொழிலாளர் நலத்துறை உடனே தலையிட்டு, இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி, தொழிலாளர்களின் அடிப்படை உரிமையையும், நலனையும் காக்க வேண்டும். - சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை