மேலும் செய்திகள்
சிமென்ட் கல் சாலை சீரமைக்கப்படுமா?
26-Mar-2025
கும்மிடிப்பூண்டி:சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் சந்திப்பில், மேம்பாலம் அமைந்துள்ளது. அதன் கீழ், சென்னை நோக்கிய திசையில் உள்ள இணைப்பு சாலையின் குறுக்கே, இரு மாதங்களுக்கு முன், மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது.கால்வாய் பணிகள் முடிந்த பின், அதன் மீது அமைக்கப்பட்ட சாலை, அடுத்த சில நாட்களிலேயே பெயர்ந்து பழுதானது. தற்போது, கரடு முரடாக மாறிய சாலையில், சிரமத்துடன் வாகன ஓட்டிகள் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.சாலை பள்ளம், சிதறி கிடக்கும் ஜல்லிக் கற்களுக்கு மத்தியில் வாகனங்களை ஓட்டி செல்வது, மிகுந்த சவாலாக இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துரித நடவடிக்கை எடுத்து, உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26-Mar-2025