சிறுமழைக்கே குளமாகிய தேசிய நெடுஞ்சாலை
திருமழிசை:சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலை சிறு மழைக்கே குளமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் தினமும் லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன. நெடுஞ்சாலையில் பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், திருமழிசை உட்பட பல பகுதிகளில் மழைநீர் செல்ல வழியில்லாமல் குளம் போல் ஆங்காங்கே தேங்கியுள்ளது. மழைநீரில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அவதிப்பட்டு வருவதோடு விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையிலும் மழைநீர் வெளியேற வழியில்லாமல் குளம் போல் தேங்கியுள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் நெடுஞ்சாலையில் மழைநீர் குளம்போல் தேங்குவதை தடுக்கும் வகையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.