மேலும் செய்திகள்
மயங்கி விழுந்து பெயின்டர் பலி
13-Sep-2024
திருத்தணியில் மயங்கி விழுந்த முதியவர் பலி
28-Aug-2024
திருத்தணி:திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 40. கடந்த ஜூலை 28ம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் நடந்த ஆடி கிருத்திகை விழாவின் போது, திருத்தணி பழைய தர்மராஜா கோவில் வளாகத்தில், அன்னதானம் வழங்குவதற்கு சமையல் செய்து கொண்டிருந்தார்.அப்போது, அடுப்பில் இருந்த சாம்பார் அண்டா அருகே நின்று, கரண்டியால் சாம்பாரை கலக்கிக் கொண்டிருந்த போது, திடீரென நிலை தடுமாறி அண்டாவில் பிரகாஷ் விழுந்தார்.பலத்த தீக்காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
13-Sep-2024
28-Aug-2024