உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டவர் உயிரிழப்பு

ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டவர் உயிரிழப்பு

அரக்கோணம்:அரக்கோணம் ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர் பகுதியில் அடையாளம் தெரியாத, 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக, நேற்று முன்தினம் காலை அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு பயணியர் தகவல் தெரிவித்தனர்.ரயில்வே போலீசார் உடல் நலம் பாதிக்கப்பட்ட நபரை அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ