உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / படம் மட்டும் செங்காளம்மனுக்கு பால்குட ஊர்வலம்

படம் மட்டும் செங்காளம்மனுக்கு பால்குட ஊர்வலம்

ஊத்துக்கோட்டை,ஆடிப்பூர விழாவை ஒட்டி, லட்சிவாக்கம் செங்காளம்மன் கோவிலுக்கு, பெண்கள் பால்குடம் ஏந்திச் சென்று அபிஷேகம் செய்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த, லட்சிவாக்கம் கிராமத்தில் உள்ளது செங்காளம்மன் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், ஆடிப்பூர விழா அன்று பெண்கள் பால்குடம் ஏந்திச் சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்வர். நேற்று ஆடிப்பூர விழாவை ஒட்டி, லட்சிவாக்கம் கிராமத்தில் உள்ள சக்தி கல் பகுதியில் இருந்து, 200க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்திச் சென்று குலதெய்வமான செல்லியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். பின்னர் அங்கிருந்து செங்காளம்மன் கோவிலுக்கு சென்று பால் அபிஷேகம் செய்தனர். பின்னர் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பெண்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ