உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சுட்டெரிக்கும் வெயிலால் ஏறுமுகத்தில் இளநீர் விலை

சுட்டெரிக்கும் வெயிலால் ஏறுமுகத்தில் இளநீர் விலை

திருவாலங்காடு, வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இளநீர் விற்பனை அதிகரிப்பதால், விலை தொடர்ந்து ஏறுமுகமாகிறது. கோடை கால வெப்பம், மக்களை வறுத்து எடுக்கிறது. திருவள்ளூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. மக்கள் பரிதவிக்கின்றனர். வெப்பத்தில் இருந்து தப்பிக்க இளநீர், குளிர்பானம், லஸ்சி, மோர், பழ ரசங்களை அருந்துகின்றனர்.குறிப்பாக இளநீரை அதிகம் நாடுகின்றனர். இளநீர் எந்த விதமான ரசாயனமும் இல்லாத பானம். அத்துடன் வெப்பத்தை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது. இதன் விளைவாக விலை கிடுகிடுவென அதிகரிக்கிறது.திருவாலங்காடு, நாராயணபுரம், சின்னம்மாபேட்டை, கனகம்மாசத்திரம் பகுதிகளில் ஒரு வாரத்துக்கு முன் ஒரு இளநீர் 20 முதல் 30 ரூபாய்க்கு கிடைத்தது. இப்போது 40 முதல் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலை அதிகம் என்பதால், இளநீருக்கு பதிலாக பழரசங்கள் அருந்துகின்றனர். தர்ப்பூசணி சாப்பிடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி