உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கிருஷ்ணா கால்வாய் பாலத்தின் தடுப்புச்சுவர் உடைந்து சேதம்

கிருஷ்ணா கால்வாய் பாலத்தின் தடுப்புச்சுவர் உடைந்து சேதம்

திருவள்ளூர்: பூண்டி அருகே, கிருஷ்ணா கால்வாய் பாலத்தின் தடுப்புச்சுவர் உடைந்துள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சென்னை நகர குடிநீர் தேவைக்காக பூண்டி நீர்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்திற்கு, ஆந்திர மாநிலத்தில் இருந்து கிருஷ்ணா நீர் கொண்டு வரப்பட்டு, சேகரிக்கப்பட்டு, பின் சென்னைக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக கண்டலேறு அணையில் இருந்து ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட் வழியாக, பூண்டி நீர்த் தேக்கத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. பூண்டியில் இருந்து மேட்டுப்பாளையம் கிராமத்திற்கு செல்லும் வழியில், கிருஷ்ணா கால்வாய் குறுக்கே, மேம்பாலம் கட் டப்பட்டு உள்ளது. இந்த பாலம் கட்டி, 30 ஆண்டுக்கும் மேலான நிலையில், பாலத்தின் பக்கவாட்டில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் உடைந்து, சேதமடைந்துள்ளது. பாலத்தில் செல்லும் வாகனங்களின் அதிர்வால், தடுப்புச்சுவர் மேலும் சேதமடைந்து, விரைவில் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, அந்த தடுப்புச்சுவரை நீர்வளத்துறையினர் சீரமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை