உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போக்குவரத்துக்கு லாயக்கற்ற தேர்வாய்கண்டிகை சாலை

போக்குவரத்துக்கு லாயக்கற்ற தேர்வாய்கண்டிகை சாலை

கும்மிடிப்பூண்டி:தேர்வாய்கண்டிகை சிப்காட் வளாகத்தை இணைக்கும் ஒன்றிய சாலை, போக்குவரத்துக்கு லாயக்கற்று மோசமான நிலையில் உள்ளது. கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய்கண்டிகை நீர்தேக்கத்தில் இருந்து தேர்வாய் கண்டிகை சிப்காட் நுழைவாயில் வரையிலான சாலை, கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ளது. அந்த சாலை வழியாக கண்ணன்கோட்டை, கரடி புத்துார், சிறுவாடா உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான கிராம மக்களும், தொழிலாளர்களும் சென்று வருகின்றனர். சாலையை, பயன்படுத்த முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக உள்ளது. அவ்வழியாக சென்று வரும் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். சாலை பள்ளங்களில் விழுந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தொழிலாளர்கள் மற்றும் மக்களின் நலன் கருதி, உடனடியாக அந்த சாலையை புதுப்பிக்க, கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை