உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  துணை சுகாதார நிலையம் மதுக்கூடமாக மாறிய அவலம்

 துணை சுகாதார நிலையம் மதுக்கூடமாக மாறிய அவலம்

மேல்நல்லாத்துார்: துணை சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், மதுக்கூடமாக மாறி வருகிறது. கடம்பத்துார் ஒன்றியம் மேல்நல்லாத்துார் ஊராட்சி அலுவலகம் அருகே, துணை சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் மேல்நல்லாத்துார் மற்றும் சுற்றியுள்ள ஐந்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த சு காதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் 'குடி'மகன்கள் மது அருந்தும் இடமாக மாறியுள்ளது. மேலும், சுகாதார நிலையத்தை சுற்றிலும் முட்செடிகள் வளர்ந்துள்ளதால், பாம்பு போன்ற விஷ பூச்சிகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. சுகாதார நிலையத்தை சுற்றி காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்டவை குவிந்துள்ளன. இதனால், சுகாதார நிலையத்திற்கு வருவோர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, துணை சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து, முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி