உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஊராட்சி செயலர் பணியிடம் காலி வளர்ச்சி பணி நடக்காததால் திணறல்

ஊராட்சி செயலர் பணியிடம் காலி வளர்ச்சி பணி நடக்காததால் திணறல்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்தில் 43 ஊராட்சிகள் உள்ளன. இதில், விடையூர், செஞ்சி, வெள்ளேரிதாங்கல், இலுப்பூர், கூவம் உள்ளிட்ட எட்டு ஊராட்சிகளில், ஊராட்சி செயலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இதனால், ஊராட்சி பகுதிகளில் சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த ஊராட்சிகளில் அருகில் உள்ள ஊராட்சி செயலர், கூடுதல் பணி மேற்கொள்வதால் சிரமம் ஏற்பட்டு வருகிறது.இதனால், அரசின் திட்டங்கள், தொகுப்பு வீடுகள், பிரதமர் வீடு கட்டும் திட்டம், பழுதடைந்த வீடுகள் சீரமைப்பது உட்பட அடிப்படை தேவைகளுக்கு பகுதிவாசிகள் திணறி வருகின்றனர்.தற்போது, ஆன்லைனில் வீடு மற்றும் தண்ணீர் வரி வசூல் செய்யும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நுாறு நாள் வேலையிலும் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும் ஊராட்சி செயலர்கள் புலம்பி வருகின்றனர்.மேலும், கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் நேரத்தில், ஊராட்சி செயலர் பங்கேற்காமலேயே கூட்டம் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி