உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / லாரி மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் பலி

லாரி மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் பலி

திருவாலங்காடு:திருத்தணி ஒன்றியம், சூரியநகரம் ஊராட்சி, தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார், 27. கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேவதி 24. கடந்த வாரம் ரேவதி உடல்நலம் பாதிக்கப்பட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.கடந்த 5ம் தேதி சிகிச்சை முடிந்து ரேவதி, கணவர் அருண்குமார் உடன், 'ஹூரோ ஹோண்டா' இருசக்கர வாகனத்தில் சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக திருத்தணி நோக்கி வந்தார்.கனகம்மாசத்திரம் காவல் நிலையம் அருகே வந்தபோது, கிருஷ்ணகிரியில் இருந்து, இரும்பு உதிரி பாகங்களை ஏற்றிக் கொண்டு திருவள்ளூர் நோக்கி சென்ற லாரி, அருண்குமாரின் இருசக்கர வாகனம் மீது மோதியது.இதில், சம்பவ இடத்திலேயே ரேவதி உயிரிழந்தார். அருண்குமார் படுகாயங்களுடன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று மதியம் உயிரிழந்தார். கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை