உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம் கிடுகிடு

பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம் கிடுகிடு

ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டம், பூண்டி கிராமத்தில், கொசஸ்தலை ஆற்றின் நடுவே அமைந்துள்ளது சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம். மழைநீர், ஆந்திர மாநிலத்தில் இருந்து சாய்கங்கை கால்வாய் வாயிலாக வரும் கிருஷ்ணா நீர்.நீர்மட்டம் குறைந்து காணப்பட்ட நிலையில், 'பெஞ்சல்' புயல் காரணமாக நீர்வரத்து ஏற்பட்டது. கிருஷ்ணா நீர் வந்து கொண்டு இருந்த நிலையில், மழை நீர் மற்றும் நேற்று முன்தினம் சிட்ரபாக்கம் அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் ஆகியவற்றால் நீர்மட்டம் 'கிடுகிடு'வென உயர்ந்தது.நேற்று, காலை 6:00 மணி நிலவரப்படி, கிருஷ்ணா நீர் வினாடிக்கு, 360 கன அடி, சிட்ரபாக்கம் அணைக்கட்டில் இருந்து, 180, மழைநீர், 2,900 என மொத்தம், 3,440 கன அடி வந்தது. மழைநீர் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.தற்போதைய கொள்ளளவு, 1.211 டி.எம்.சி., நீர்மட்டம், 27.40 அடி. விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை