உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது

திருத்தணி:திருத்தணி அடுத்த பொன்பாடி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி அஸ்வினி,30. அதே பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத்,33. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம் இரவு அஸ்வினி மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் வீட்டில் இருந்த போது, பிரசாத் அங்கு வந்து, கணவன், மனைவியை தரக்குறைவாக பேசினார். மேலும் பிரசாத் அஸ்வினியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். அஸ்வினி கொடுத்த புகாரில் திருத்தணி போலீசார் பிரசாத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை