உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வேலைக்கு சென்ற வாலிபர் மாயம்

வேலைக்கு சென்ற வாலிபர் மாயம்

கடம்பத்துார்:கடம்பத்துார் அடுத்த ராமன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ், 25. சென்னையில், டாடா ஸ்கை ஆண்டனா பணி செய்து வரும் இவர், ஆறு மாதத்திற்கு முன் பணி மாறுதல் காரணமாக, திருநெல்வேலி மாவட்டத்திற்கு சென்று பணிபுரிந்து வந்தார். இரு வாரங்களுக்கு ஒருமுறை, வீட்டிற்கு வருவது வழக்கம்.கடந்த 1ம் தேதி காலை வீட்டிலிருந்த சென்றவர், பின் வீடு திரும்பவில்லை. மொபைல் போன் மூலமும் தொடர்பு கொள்ள முடியவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து, ஸ்டீபன் ராஜின் தந்தை ஐசக், நேற்று கொடுத்த புகாரின்படி, கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை