உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பட்ட பகலில் வீட்டில் திருட்டு

பட்ட பகலில் வீட்டில் திருட்டு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி, ம.பொ.சி., நகரில் வசித்து வருபவர் வெங்கடேஷ், 34, தனியார் தொழிற்சாலை ஊழியர். குடும்பத்துடன் நேற்று கோவிலுக்கு சென்று, இரண்டு மணி நேரத்தில் வீடு திரும்பினார்.வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இடைப்பட்ட நேரத்தில், மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, இரண்டு சவரன் வளையல்களை திருடி சென்றனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ