வீட்டின் பூட்டு உடைத்து பணம், நகை திருட்டு
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே பெரியகரும்பூர் கிராமத்தில் வசிப்பவர் தங்கராஜ், 60, விவசாயி. இரு தினங்களுக்கு முன் வீட்டை பூட்டிக்கொண்டு சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இடைப்பட்ட நாளில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவை திறந்து லாக்கரை உடைத்து, இரண்டு கிராம் நகை, 7, 000 ரூபாய் பணம் திருடி சென்றனர். கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.