உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இடம் இருக்கு... குளம் எங்கே? புதரில் மாயமாகி வரும் அவலம்

இடம் இருக்கு... குளம் எங்கே? புதரில் மாயமாகி வரும் அவலம்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றித்துக்குட்பட்டது மேல்நல்லாத்துார் ஊராட்சி. இங்குள்ள திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் முக்குளத்தீஸ்வரி உடனுறை முக்குளத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.பழமையான இந்த கோவில் முன் அமைந்துள்ள குளத்தில் பக்தர்கள் நீராடி சுவாமியை வழிபட்டு வந்தனர். மேலும், கோவில் குளத்தில் பகுதிவாசிகள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தும் வந்தனர். இந்த கோவில் குளம் போதிய பராமரிப்பு இல்லாததால், புதர் வளர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வரும் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முக்குளத்தீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ