உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெடுஞ்சாலையில் மீடியன் எச்சரிக்கை இல்லை தானியங்கி சிக்னலும் அவுட்

நெடுஞ்சாலையில் மீடியன் எச்சரிக்கை இல்லை தானியங்கி சிக்னலும் அவுட்

ஊத்துக்கோட்டை:ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், மஞ்சங்காரணை, கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், தாராட்சி, ஊத்துக்கோட்டை மற்றும் இணைப்பு சாலை வழியே, 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.சென்னையில் இருந்து, ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர், நகரி, புத்துார், திருப்பதி, கடப்பா, கர்நுால், நந்தியால், ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் அனைத்து கனரக வாகனங்களும், மேற்கண்ட ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை சாலையில் செல்கின்றன. தினமும், 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் இச்சாலை பராமரிப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.சூளைமேனி அருகே தேர்வாய் சிப்காட் தொழிற்பூங்கா உள்ளது. இங்கிருந்து மூலப்பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்டுகள் எடுத்து செல்ல மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சென்று வர மேற்கண்ட சாலையில் பயன்படுத்துகின்றனர்.இதில், ஊத்துக்கோட்டை - பெரியபாளையம் இடையே சூளைமேனி, தண்டலம் உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் சாலை தடுப்பு உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால், மீடியனில், மணல் குவியலும், செடிகளும் வளர்ந்துள்ளன. மீடியன் இருப்பது குறித்த எச்சரிக்கை பலகையும் இல்லை. கடந்தாண்டு வைக்கப்பட்ட தானியங்கி சிக்னலும் வேலை செய்வதில்லை.இதனால், இப்பகுதிகளில் உள்ள சாலை தடுப்புகள் தெரியாமல் இரவு நேரங்களில் வரும் கனரக வாகனங்கள் எச்சரிக்கை வைக்கப்படாத இடங்களில் உள்ள, 'மீடியன்' மீது மோதி விபத்து ஏற்படுகிறது.எனவே, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன், மீடியன் குறித்த எச்சரிக்கை, தானியங்கி சிக்னல் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ