உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறுவாபுரியில் 10ம் தேதி திருக்கல்யாண உற்சவம்

சிறுவாபுரியில் 10ம் தேதி திருக்கல்யாண உற்சவம்

கும்மிடிப்பூண்டி:சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், இம்மாதம் 10ம் தேதி, திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அருகே பிரசித்திபெற்ற சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. அங்கு நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தை தரிசிப்போருக்கு, திருமண தடை விலகும்; குழந்தைப்பேறு கிட்டும் என்பது ஐதீகம். சென்னையை சேர்ந்த அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவினர் சார்பில், இம்மாதம் 10ம் தேதி, 13ம் ஆண்டு, வள்ளி மணவாள பெருமான் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. அன்றைய தினம், வள்ளி மணவாள பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அதை தொடர்ந்து திருக்கல்யாண உற்சமும் நடைபெறும் என, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி