மேலும் செய்திகள்
அரசு பஸ்சில் தினமும் 2.70 லட்சம் பேர் இலவச பயணம்
14-Sep-2024
திருவாலங்காடு ஒன்றியம் பழையனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோவில் தெரு, ஒத்த வாட தெருவில் உள்ள மழை நீர் மற்றும் கழிவு நீர் கால்வாய் 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது இந்த கால்வாய் சேதமடைந்து, கொசு உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறது. உள்ளாட்சி நிர்வாகம் பழுதடைந்த கால்வாயை சீரமைக்க வேண்டும்.-- ந. முத்து சரவணகுமார், பழையனூர் .திருத்தணி- நாகலாபுரம்
கூடுதல் அரசு பஸ்கள் அவசியம்
திருத்தணி- நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலையில், 75க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் தங்கள் அத்தியாவசிய பணிகள் காரணமாக திருத்தணிக்கு வரவேண்டும். அதே போல் பள்ளி மாணவர்கள் மேனிலைக் கல்வி மற்றும் கல்லுாரி கல்வி கற்பதற்கு திருத்தணி நகருக்கு வந்து செல்கின்றனர். இந்த வழித்தடங்களில், ஓரிரு பேருந்துகள் மட்டும் இயங்குகின்றன. எனவே மாணவர்கள் நலன்கருதி பள்ளி நாட்களில், கூடுதல் அரசு பஸ்கள் இயக்க வேண்டும்.- -எம்.பிரவீன்குமார், கோதண்டராமபுரம்.கை பம்பு பயன்பாட்டுக்கு வருமா?
திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகளக்காட்டூர் ஊராட்சி சின்னகளக்காட்டூர் கிராமத்தில், சுடுகாடு அமைந்துள்ளது.இறுதி சடங்கிற்கு வருபவர்கள் கை பம்பை பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பழுது காரணமாக தண்ணீர் வரவில்லை.இதனால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே பழுதை சரி செய்து கை பம்பை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- கோ.பிரவீன் குமார்சின்னகளக்காட்டூர் கிராமம்.
14-Sep-2024