உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போதை மாத்திரை கடத்தல் திருவள்ளூர் வாலிபருக்கு கம்பி

போதை மாத்திரை கடத்தல் திருவள்ளூர் வாலிபருக்கு கம்பி

திருத்தணி,:வடமாநிலத்தில் இருந்து சென்னைக்கு கஞ்சா, போதை மாத்திரை கடத்திய இரண்டு வாலிபரை, திருத்தணி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக சென்னைக்கு கஞ்சா கடத்துவதாக, திருவள்ளூர் எஸ்.பி., விவேகானந்த சுக்லாவுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி, தனிப்படை எஸ்.ஐ., குமார் தலைமையிலான போலீசார், நேற்று பொன்பாடி சோதனைச்சாவடி அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து தமிழகத்தை நோக்கி வந்த சரக்கு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, லாரியில் இருந்த இரண்டு வாலிபர்களிடம், 3 கிலோ கஞ்சா, 225 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், திருவள்ளூரைச் சேர்ந்த தேவகுமார், 28, அருண்குமார், 27 என்பதும், அசாம் மாநிலத்தில் இருந்து ஆந்திரா வழியாக தமிழகத்திற்கு கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து, திருத்தணி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். கடந்த சில நாட்களாகவே பொன்பாடி சோதனைச்சாவடி வழியாக, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை