உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புட்லுாரில் திருவூரல் உத்சவம் வீரராகவர் நாளை எழுந்தருளல்

புட்லுாரில் திருவூரல் உத்சவம் வீரராகவர் நாளை எழுந்தருளல்

திருவள்ளூர்:திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோவிலில் உள்ள உத்சவர் வீரராகவ பெருமாள், ஆண்டுதோறும் புட்லுார் கிராமத்திற்கு விஜயம் செய்வது வழக்கம். இது திருவூரல் மகோத்சவம் என்று அழைக்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான திருவூரல் மகோத்சவம், நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி, வீரராகவர் கோவிலில் இருந்து உத்சவர் பெருமாள், அதிகாலை 5:00 மணிக்கு புட்லுார் புறப்படுகிறார். அங்கு, மதியம் 1:00 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெறும்.இரவு 9:30 மணிக்கு புட்லுார் கிராம வீதிகளில், வாணவேடிக்கையுடன் திருவீதி புறப்பாடு நடைபெற உள்ளது. மறுநாள் அதிகாலை 2:00 மணிக்கு புட்லுாரில் இருந்து வீரராகவ பெருமாள் மீண்டும் திருவள்ளூர் கோவிலுக்கு திரும்புவார்.இதற்கான ஏற்பாடுகளை வீரராகவர் கோவில் தேவஸ்தான நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை